ரிஷி முனிவர்கள் வாழ்ந்த காலக்கணக் கின்படி, நமக்கு நல்வழிகாட்டியாக விளங்கவே அருளப்பட்டது ஜோதிடம். வேறு எந்தக் கலையாலும் விளக்க இயலாத எதிர்கால நிகழ்வு களை, நம் கண்முன் பிரதிபலிக்கச் செய்யும் வல்லமை மனுஸ்மிருதியில் குறிப்பிட்டதுபோல "ஜ்யோ திஷ'த்திற்கு உண்டு. படித்தவரும் பாமரரும் எளிதில் அறிந்துகொள்ள வேண்டிய எளிய ஜோதிடப் பலன்களை, உலக ஜோதிடத் தமிழ் நெஞ்சங்களுடன் பகிரவே இங்கு சில ஜோதிட நிதியதிகள்- குரு சுப்பிரமணியர் தாள் பணிந்து.

Advertisment

johida-rules

எந்த கிரகப்பெயர்ச்சிக் காலத்திலும் நாம் மனதில் கொள்ளவேண்டிய ஜோதிட விதிகள் யாதெனில், நவகிரகங்களும் தாம் நின்ற ராசியில் ஒரு குறிப்பிட்ட பாகையில் நின்றால் மட்டுமே அதிக சுபப்பலன் தரும் வல்லமை பெறும். கிரகம் நின்ற ராசி முழுவதுமே காரகப் பலனை அளிக்காது. ஒருவர் ஜாதகப்படி எந்த ராசியிலும் முதல் 10 பாகையில் நின்ற சூரியனும் செவ்வாயும் அந்த வீட்டின் பலனை நன்கு செய்யும்; வழங்க மறுக்காது. தீய கிரகங்கள் திருஷ்டித்தபோதும், ராசி மத்தியான 10 முதல் 20 பாகையில் பிறப்பு ஜாதகத்தில் அமர்ந்த குருவும் சுக்கிரனும், அந்த ஸ்தான வள வாழ்வினை இவர்கள் நின்ற பாவத் தின்வழியாக நமக்கு அளிக்கக் கடமைப்பெற்றவர்கள். ராசியின் கடை திரேக்காணம் என்னும் 20 டிகிரிமுதல் 30 டிகிரிவரை ஒரு வீட்டில் நின்ற சனி, ராகு- கேதுக்கள் கெடுபலனை அதிகம் அளிக்காது. தாம் பெற்ற காரக, ஆதிபத்தியப் பலனை நிச்சயம் வழங்குவார்கள். உத்தர வாதமாக சந்திரனும் புதனும் மட்டுமே தாம் நின்ற ராசியின் 30 டிகிரியிலும் ராசிபலனை வழங்கக் கடமைப்பட்டவர்கள்.

பராசர மகரிஷி வகுத்த விதியின்படி, ராகு 11, 6, 3-ல் நின்றபோதும், சுபர் பார்வை பெற்றபோதும்கூட, நின்ற ஸ்தானத்தில் நட்பு கிரகத்தின் சாரங்களில் படமெடுத்து ஆடினால் மட்டுமே ராகு தசையின் நடப்பில் கட்டுக்கட்டான கரன்சிகள், கட்டழகிகளின் சிநேகம், கார், பங்களா என சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கத் தருவார்.

நல்ல யோகமான ஜாதகங்களுக்குக்கூட பகைகிரக தசைகள் அடுத்தடுத்து வந்தால் வாழ்வு சிதறத்தான் செய்கிறது பலருக்கும். எளிய ஜோதிட விதிப்படி ஒருவரின் லக்னப்படியும், ராசியின்படியும் 9-க்குடையவர் (பாக்கியாதிபதி) சம்பந்தப்பட்டு அக்கிரக தசையும் நடக்க ராஜயோகம் அனுபவமாவது திண்ணம். இதிலும் 9-ஆம் வீட்டு கிரகம் 9-ல் ஆட்சியோ அல்லது உச்ச வீட்டிலோ நின்றவர்களுக்கு பல பாக் கியங்கள் சிரமமின்றி அனுபவத்திற்கு வரும்.

அது ஏனோ அப்படித்தான், சில பெண் களுக்கு மட்டும் அவர்களின் லக்னம் மற்றும் ராசிக்கு 9-க்குடைய கிரகம் 12, 8, 6-ல் நின்றால் மகாலட்சுமியும், சரஸ்வதியும்கூட கருணை காட்டுவதில்லைதான். கண்ணீரில் காலங்கழிக்க நேரும். ஒருபடி மேலாக 9-க்குடையவர் வீடோ அல்லது 9-ஆம் அதிபதி நின்ற ராசியோ திதி சூன்ய ராசிகளாகவோ, பகை, நீசமாகவோ அமையப் பெற்றவர்களுக்கு அல்லல் தொல்லை அநேகம்; பாக்கிய பங்கம். குருவும் சூரியனும் 9-ஆம் வீட்டிற்குரிய காரக கிரகங்கள். இவர்கள் 2, 11-ல் பலம்பெற்றால் பொதுமக்களிடையே செல்வாக்குடன் வாழ்வார்கள்.

ராசிபலன்களை அறியவிரும்பும் அனைவரும் அறியவேண்டியது யாதெனில், இந்த 2019-ல் உங்கள் ராசிக்கு சூரியன் 5-ல் சஞ்சரிக்கும் 30 நாட்களும் கையில் காசு சேராது. அரசாங்கத்தால் அனுகூலம் கிட்டாது. கோட்சார செவ்வாய் ராசிக்கு 7-ல் உலவும் 45 நாட்களும், மண்மனை, சொத்துப் பிரச்சினைகள் தீராது. கோட்சார புதன் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் 30 நாட்களும் கல்வி, பத்திரப்பதிவு, மாமன்வழி அனுகூலம் பின்னடைவு தரும். குருப்பெயர்ச்சியின்போது உங்கள் ராசிக்கு 3-ல் வரும் 12 மாதமும் பணக்கஷ்டமும், பெற்ற பிள்ளைகள்வழி மனக்கஷ்டமும்தான். ராசிக்கு 6-ல் உலவும் சுக்கிரன் அந்த 30 நாளும் சுக்கிர பரிபாஷைகளுக்குத் தடைதான். விரும்பியதை அடைய தடை, தாமதம் தரும்.

யாருக்குமே பஞ்சமாதிபதி என்னும் 5-க்குடையவரும், பாக்கியாதிபதி எனப்பட்ட 9-ஆம் அதிபதியும், ராசி, லக்னப்படி 2, 11-ல் அமைந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. குரு, சூரியன், செவ்வாய் உங்கள் ராசிக்கு 12, 8-ல் உலவாத காலம் சந்தோஷ வாழ்வே! அதிர்ஷ்டம்தான்; வாழ்க வளமுடன்.

2019-ல் நகரும் ராகு- கேதுக்கள் உங்களுக்கு நல்வாழ்வு நல்கட்டும்.

செல்: 94431 33565